ஏசியிலிருந்து வந்த கரும்புகையால் மூச்சுத்திணறி தாய், மகள் பலி

சென்னை அம்பத்தூரரைச் சேர்ந்தவர் அகிலா பேகம் (50). இவரது மகள் நஸ்ரி பேகம் (16) தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் ஏசி போட்டுவிட்டு இருவரும் உறங்கியுள்ளனர். இந்நிலையில் காலை 5.45 மணியளவில் ஏசியிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. மூச்சுத்திணறிய நிலையில் இருவரும் உயிருக்கு போராடியுள்ளனர். அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் எவ்வளவோ போராடியும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். மேலும் அவர்கள் உடலில் 30 சதவீதம் தீக்காயம் இருந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Tags :