போலீஸ் அலுவலக ஊழியரை வெட்டிய வழக்கு 3 பேர் கைது

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு மண்ணுளி பாம்பு கடத்தல் வழக்கில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரவிந்த் வீட்டில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற் குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது. மேலும் அரிவாளாலும் வெட்டியது.படுகாயமடைந்தவரை நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கன்னியாகு மரி போலீசார் வழக்குப் பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய 5 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த நிலையில் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த எபனேசர் (19) கன்னியா குமரியை சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (35) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய் துள்ளனர். கைது செய் யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. 3 பேரையும் போலீ சார் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தினர். தலைமறைவாகியுள்ள 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags :