லெஃப்டினன்ட் ஜெனரல்  சர்வரோவ் மாஸ்கோவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

by Admin / 23-12-2025 11:12:51am
லெஃப்டினன்ட் ஜெனரல்  சர்வரோவ் மாஸ்கோவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

ரசிய ராணுவ அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல்  சர்வரோவ் மாஸ்கோவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். மாஸ்கோவின் தெற்கு பகுதியில் உள்ள யாசனேயா வீதியில் ஒரு குடியிருப்பின் முன் நிறுத்தி இருந்த தன் காரை எடுக்கச் சென்ற பொழுது காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவர் கொல்லப்பட்டார். இவர் ரஷ்யா ஆயுதப்படைகளின் பொது பிரிவின் செயல்பாட்டு பயிற்சி துறையின் தலைவராக பணியாற்றி வந்தவர் . செச்சினியா, சிரியா ராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர். இக் கொலையில் உக்கிரேனிய உளவு அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று ரஷ்ய புலனாய்வு குழு சந்தேகம் தெரிவித்துள்ளது .எனினும், உக்கிரன் இதுவரை இதற்கு அதிகாரப்பூர்வமாக பொறுப்பு ஏற்கவில்லை .கடந்த ஓர் ஆண்டில் மாஸ்கோவில் கொல்லப்படும் மூன்றாவது ரஷ்ய ஜெனரல் இவர் ஆவார்.

 

 

Tags :

Share via

More stories