பிபிசி ஆவணப்படம்: மத்திய அமைச்சர் விமர்சனம்
பிபிசி ஆவணப்படம் தற்செயலாக எடுக்கப்பட்டதல்ல என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிபிசி ஆவணப்படம் அரசியல் செல்வாக்குடன் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளதாகவும், சில சமயங்களில் வெளிநாட்டில் இருந்து அரசியல் செய்யப்படுகிறது என்றார். டெல்லியில் தேர்தல் சீசன் தொடங்கியுள்ளதா என்று தெரியவில்லை, ஆனால் லண்டன் மற்றும் நியூயார்க்கில் தொடங்கிவிட்டது என்றார். குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியின் பங்கு என்ன என்பது பற்றி விளக்கும் வகையில் வெளியான இந்தப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Tags :