அயோத்திதாச பண்டிதர் திருவுருவப் படத்திற்கு அரசு மரியாதை
திராவிட இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரும், சாதி எதிர்ப்புப் போராளியுமான பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், சி.வி.கணேசன், மதிவேந்தன், மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Tags :



















