நாடகங்களை நடத்தாமல் நீட்டை ஒழிக்க வேண்டும் - ராமதாஸ்

நீட் தேர்வு பயத்தில் நடப்பாண்டில் 6வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நாடகங்களை
நடத்தாமல் நீட்டை ஒழிக்க நடவடிக்கை வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், நீட் தேர்வுக்கு அஞ்சி நடப்பாண்டில் மட்டும் இதுவரை 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது. குறைந்தபட்சம் தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags :