திமுகவினர் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சேகர்பாபு

சொந்த கட்சிக்காரர்கள் தவறு செய்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே முதல்வரின் நிலைப்பாடு என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். "நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் குற்றஞ்சாட்ட வேண்டும். தவறு நடக்காமல் நடவடிக்கை எடுப்பது ஒரு பக்கம் என்றால் தவறு நடந்த பிறகு கடுமையான நடவடிக்கை எடுப்பது இன்னொரு பக்கம் நடக்கிறது. இது நீதியின் ஆட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியாகும்" என கூறினார்.
Tags :