நேருக்கு நேர் ஒன் டு ஒன் நிகழ்வில் தமிழக முதலமைச்சர் தி.மு.க தலைவருமான மு. க. ஸ்டாலின் --அ.தி.மு.கவினரோடு நெருக்கமாக தொடர்பு -தி.மு.க, ஒன்றிய செயலாளர் பதவி பறிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 இல் நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் மும்முர மாக தேர்தலுக்கான வேலைகளை செய்து வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி பணிகள் குறித்து அறிந்து கொள்ளும் போட்டு தமிழக முதலமைச்சர் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன் நேருக்கு நேர் ஒன் டு ஒன் நிகழ்வில் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிளை, ஒன்றிய செயலாளர் பேசி தொகுதி நிலவரத்தை கேட்டறிந்தார், இந்நிலையில், கோவை தெற்கு மாவட்ட சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளர் டி,வி ,மகாலிங்கம் அ.தி.மு.கவினரோடு நெருக்கமாக தொடர்பு வைத்து இருக்கின்ற குற்றச்சாட்டுகளை பல தெரிவித்ததை அடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டு,சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளராக ஆா், ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார்.
Tags :


















