இனி விடியல் பயண திட்டம் - முதல்வர் அறிவிப்பு

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் இனி 'விடியல் பயண திட்டம்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய அவர், பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ‘விடியல் பயணம்' என்று பெயர் சூட்டப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.11 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
Tags :