வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் - முதல்வர்

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ளார். இந்த திட்டம் மூலம் ரூபாய் 1000 நேரடியாக மகளிரின் வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் மாதம் செலுத்தப்பட உள்ளது. முதல் மாத தொகை செப்டம்பர் இறுதியில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags :