தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவில் மூன்றாவது கூட்டம் முதலமைச்சர்.மு. க. ஸ்டாலின்தலைமையில்
தமிழக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்.மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவில் மூன்றாவது கூட்டத்தில் ஆற்றிய உரையில், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்கப்படும் என்றும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவில் காலநிலை கல்விக்கான தனிக் கொள்கை வெளியிடப்படும் என்றும் உறுதி அளித்ததோடு ,மத்திய அரசு 2070-வது குள் நிர்ணயித்துள்ள கார்பன் நடுநிலை இலக்கை விட தமிழ்நாடு அதற்கு முன்னதாகவே அந்த இலக்கிய அடையும் என்றும் அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி தொழில்நுட்பங்களை கையாளும் தொழிற்சாலைகளுக்கு பசுமை மதிப்பீடு வழங்கும் இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். கழிவுகளை மறுசுழற்சி செய்ய உதவும் ஆன்லைன் கழிவு பரிமாற்ற மையம் என்ற தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபாளையம் பகுதியில் குறைந்த அளவிலான கார்பன் வெளியேற்றத்தைக் கொண்ட மாதிரி தொழில் மண்டலமாக மாற்றும் திட்டத்தையும் வெளியிட்டார் .வெப்ப அலை பாதிப்பினால் உயிரிழப்பவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் தம் அறிவிப்பின் மூலமாக உறுதிப்படுத்தினார்.
Tags :








.jpg)










