மது அருந்த பணம் தரமறுத்த தாயை கொல்ல முயன்ற அண்ணனை அடித்து கொன்ற தம்பி

கோவில்பட்டி நடராஜபுரம் 5வது தெருவைச் சேர்;ந்த செல்லத்துரை (26) என்பவர் நேற்று நள்ளிரவு மது அருந்த தனது தாய் ஆறுமுகத்தாய் பணம் தர மறுத்த காரணத்தினால் அவரது கழுத்தினை நெறித்து கொல்ல முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது தம்பி முத்துச்செல்வம் (19) அருகில் இருந்த கட்டையை எடுத்து செல்லத்துரையை தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் செல்லத்துரை உயிரிழந்தார். இதையெடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது மட்டுமின்றி முத்துச்செல்வத்தினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : The brother who beat his brother to death who tried to kill his mother for not drinking money