பாஜக பிரமுகர் உமா சங்கர் கொலை வழக்கில் 8 பேரை கைது செய்து விசாரணை.

by Editor / 27-04-2025 05:13:16pm
 பாஜக பிரமுகர் உமா சங்கர் கொலை வழக்கில் 8 பேரை கைது செய்து விசாரணை.

புதுச்சேரியில் நேற்று இரவு பாஜக பிரமுகர் உமா சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் வசிக்கும் சாமி பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த கர்ணன் என்கிற ரவுடிக்கும் இவருக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் கர்ணன் உத்தரவின் பேரில் உமா சங்கரை வெட்டி கொலை செய்ததாக திண்டிவனம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 வாலிபர்களை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவாக உள்ள ரவுடி கர்ணனை தேடி வருகின்றனர்.

 

Tags : புதுச்சேரி - பாஜக பிரமுகர் உமா சங்கர் கொலை வழக்கில் 8 பேரை கைது செய்து விசாரணை.

Share via