கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜிநாமா ஏற்பு

by Editor / 19-07-2021 03:45:59pm
கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜிநாமா ஏற்பு

 


அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் ராஜிநாமா ஏற்கப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, அதிமுகவின் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்திருந்தனர்.
இந்நிலையில்,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது இவர்களது ராஜிநாமாவை ஏற்பதாக மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via