தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

by Editor / 17-02-2024 09:49:41pm
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 2019 முதல் கே.எஸ். அழகிரி பதவி வகித்து வந்த நிலையில் அவரை மாற்றம் செய்து, புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையை பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார். மேலும் செல்வப்பெருந்தகை வகித்து வந்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவி எஸ். ராஜேஸ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த கே.எஸ். அழகிரிக்கு காங்கிரஸ் பாராட்டு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

Share via

More stories

Logo