தமிழகமும் புதுச்சேரியும் எனக்கு ஒன்று தான். அங்கும் இங்கும் இருக்கிறவர்கள் நம்மவர்கள் தான்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி துறைமுக உப்பள பகுதி பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவருக்கு முன்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பேசிய பின்னர் விஜய் எழுதி வைத்த உரையை வாசிக்க ஆரம்பித்தார்.
புதுச்சேரியை பார்த்து தமிழக முதலமைச்சர் காவல்துறையை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் புதுச்சேரிக்கு தமிழகத்தை போன்று பாரபட்சமாக நிதி வழங்காமல் புறக்கணிப்பதாகவும் மாநில அந்தஸ்து கேட்டு தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வைத்த பின்பும் அகோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் போதிய நிதி இல்லாமல் கடன் பத்திரங்கள் வழியாக மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் சொல்லியதோடு மற்ற மாநிலங்களில் இருப்பது போன்று புதுச்சேரியிலும் ரேஷன் கடை வழியாக பொது மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களை வழங்குவதற்கான நிலையை புதுச்சேரி அரசு உருவாக்க வேண்டும் . எனக்கு தமிழகமும் புதுச்சேரியும் எனக்குஒன்றுதான் அங்கும் இங்கும் இருக்கிறவர்கள் நம்மவர்கள் தான். மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பறையினால் தாக்கப்படுவதை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மட்டும் இன்றி புதுச்சேரியிலும் நிச்சயமாக நாம் வெல்வோம் என்று தம் கருத்தை வெளிப்படுத்தினார்.
Tags :


















