புதிய கல்விக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் அரசியல் நோக்கத்திற்காக தமிழக அரசு அதை எதிர்க்கிறது- கிருஷ்ணசாமி

தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக இட ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்று ஆலோசனை வழங்கிய நிலையில், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு அதில் உள்ள குறைகளை முதலில் மக்களுக்கு கூறுங்கள் எனவும், புதிய கல்விக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் திமுகவில் உள்ள சில அறிவிஜீவிகள் புதிய கல்விக் கொள்கை எதிர்த்து வரும் நிலையில், புதிய கல்விக் கொள்கையை பற்றி தமிழக முதல்வர் நான்கு வார்த்தைகளாவது தெளிவாக பேசுவாரா? அப்படி தமிழக அரசு புதிய கல்வி கொள்கையில் உள்ள பாதகங்களை கூறினால் அது குறித்து விவாதிக்க தயார் எனவும், கடந்த காலங்களைப் போல திமுக அரசியல் செய்ய வேண்டாம் எனவும் இது போன்ற அரசியல் எண்ணத்தில் இருந்து திமுக வெளியே வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், விரைவில் மொழிப்போர் வரும் என திமுகவினர் கூறி வரும் நிலையில், அதனை தாங்கள் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், திமுகவினர் வாக்கு வங்கி பெறுவதற்காக சுயநலத்தோடு இட ஒதுக்கீடு கொடுத்துள்ளதாகவும் திமுக அரசுக்கு முடிவு கட்டவே தாங்கள் களத்தில் இறங்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, இன்னும் ஒரு வருட காலம் மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும் என்பதால் தமிழகத்தில் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டலில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் சுரண்டப்படும் கனிமங்களை வைத்தே திமுக அரசின் சுரண்டல்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாகவும், அவர்களை அங்கிருந்து துரத்துவதிலேயே அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டிய நிலையில், தொடர்ந்து, மாஞ்சோலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கூறும்போது, தற்போதைய ஆட்சி மன்னராட்சி போல் செயல்பட்டு வருவதாகவும், மாஞ்சோலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை அரசு அதிகாரிகள் கொடுத்து வருவதாகவும் கண்ணீர் மல்க அவர் வேதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags : புதிய கல்விக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் அரசியல் நோக்கத்திற்காக தமிழக அரசு அதை எதிர்க்கிறது- கிருஷ்ணசாமி