வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களில் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் வங்கி முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி துறையினிலே காலியாக இருக்கின்ற லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரத்தில் ஐந்து நாள் வேலை பார்க்கும் திட்டத்தை வங்கிகளில் அமல்படுத்த வேண்டும்,
ஊழியர்கள் அலுவலருக்கு தரப்படும் சலுகைகளில் வருமான வரி பிடிக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.
மற்றும் பொதுத்துறை வங்கிகளை நிர்வாகம் செய்வதற்கு நிர்வாக குழு இருக்கும்பொழுது வங்கிகளின் அன்றாட நிர்வாக நடைமுறை நடவடிக்கைகளை இடையூறு செய்ய முயற்சிக்கும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
Tags : வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.