80 லட்சம் கணக்கில் வராத ரொக்கப் பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் பறிமுதல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ₹80 லட்சம் கணக்கில் வராத ரொக்கப் பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கேசவன் (47) என்பவரிடம் இந்தப் பணம் பிடிப்பட்டது.கோவையில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் (பிளாட்பார்ம் எண் 11) இவர் பயணம் செய்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பலத்த பாதுகாப்புச் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி இந்தப் பணம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மேலதிக விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Tags :


















