அனைத்து உலக வள்ளலார் மாநாடு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இன்று கீழ்பாக்க ஏகாம்பரநாதர் திருக்கோயில் மைதானத்தில் அனைத்து உலக வள்ளலார் மாநாடு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து வள்ளலார் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் மூலிகை கண்காட்சியின் பார்வையிட்டார். இம்மாநாட்டில் முதலமைச்சர் எட்டு அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி வள்ளலார் நெடுஞ்சாலை என அழைக்கப்படுவதாகவும் வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி நிறுவப்பட்டு அங்கு திருவருட்பா இசைப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் சென்னையில் இந்து சமய அறநிலை துறை வளாகத்தில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும் மேட்டுக்குப்பம் மருதூர் மற்றும் கருங்குழி ஆகிய இடங்களில் வள்ளலார் பெயரில் அன்னதான கூடங்கள் திறக்கப்படும் என்றும் வடலூரில் வள்ளலார் பெயரில் புதிய மூலிகை தோட்டம் அமைக்கப்படும் என்றும் பிரிச்சுவல் அல்கமி என்ற வள்ளலார் குறித்த புத்தகம் அறநிலைத்துறையால் வெளியிடப்படும் என்றும் வள்ளலார் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் மூன்று நாட்கள் விழா சிறப்பாக நடத்தப் படும் தெரிவித்ததோடு வள்ளலார் மையத்தில் கட்டப்பட்டுள்ள கட்டுமான பணிகளை திறந்து வைத்தார்.
Tags :













.jpg)




