பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அகற்றுங்கள்... டி.ஜி.பி. உத்தரவு...

by Admin / 02-09-2021 05:03:53pm
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அகற்றுங்கள்... டி.ஜி.பி.  உத்தரவு...

 

காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
சாலை விதி மீறல்கள், கடத்தல் விவகாரங்களில் சிக்கிய வானகங்கள் மற்றும் விபத்துகளில் சிக்கிய வாகனங்கள் என பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் காவல் நிலைய வளாகங்களில் நீண்ட காலமாக தேங்கிக் கிடப்பதாகவும்,   இடப்பற்றாக்குறை ஏற்படுவதோடு, சுகாதாரமற்ற சூழ்நிலை உருவாகுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

 பறிமுதல் செய்யப்பட்டு தேங்கிக் கிடக்கும் வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க, ஏலத்தில் விடவும்   அறிவுறுத்தி 
 சைலேந்திர பாபு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

 பல்வேறு சந்தர்ப்பங்களில் விபத்தில் சிக்கி சேதமான வாகனங்களை துரதிஷ்டம் எனக்கருதி  திருப்பி வாங்க உரிமையாளர்கள் முன் வருவதில்லை , அவ்வாறு இருப்பவர்களை வீடுகளுக்கே தேடிச் சென்று வாகனங்களை ஒப்படைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கென தனிக்குழு ஒன்றை அமைத்து பல்வேறு மாவட்டங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via