1 கோடி இழப்பீடுவழங்க வேண்டும் - வருண் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம்.

by Admin / 20-11-2021 08:04:59pm
1 கோடி இழப்பீடுவழங்க வேண்டும் - வருண் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம்.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு 1 கோடி வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு வருண் காந்தி கடிதம்

போராட்ட களத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடுவழங்க வேண்டும் என பாஜக எம்.பி வருண் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் .


மக்களவை உறுப்பினர் வருங்காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஓராண்டாக 3 வேளான் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தமைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.


 இதுவரை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் இன்னுயிரை மாய்த்து உள்ளனர்;  பிரதமர் தன் முடிவை முன்னரே எடுத்து இருந்தால்   யாரும் பலியாகி இருக்க மாட்டார்கள். உயிரிழந்த விவசாய்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.


 விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டவழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via