கேரளா மாநிலத்திற்கு 10 சக்கரங்களுக்கு மேல் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு திடீர் தடை பொதுமக்கள் மகிழ்ச்சி.

by Admin / 12-05-2023 04:03:34pm
கேரளா மாநிலத்திற்கு 10 சக்கரங்களுக்கு மேல் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு திடீர் தடை பொதுமக்கள் மகிழ்ச்சி.

 

 

 

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தினமும் கேரள மாநிலத்திற்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை 10 சக்கரங்கள் முதல் 22 சக்கரங்கள் வரை சுமார் 900 வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக நாளுக்கு நாள் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது  இதனை தொடர்ந்து பல்வேறு சமூக நல அமைப்புகள் கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுவதை கண்டித்து அறிக்கைகளை விட்டும் புகார் அளித்தும் வந்த வண்ணம் உள்ளனர் கனிம வளங்களை எல்லையில் கடத்தி விடுவதற்கு என்று தனியாக 50க்கும் மேற்பட்ட புரோக்கர்களும் செயல்பட்டு வருகின்றனர் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்துவதற்கு அதிகாரிகளும்  இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிகாலைப் பொழுது எஸ் வளைவு உள்ளிட்ட பல்வேறு குறுகிய மலைவழிச் சாலைகளில் வாகன பழுது ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்புகளை ஏற்பட்டு வருகின்றன இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகளும் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளும் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர் தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவிதமான சம்பவங்கள் அரங்கேறி வருவதைத் தொடர்ந்து தொடர் கண்டனங்கள் பொதுமக்கள் மத்தியில் இருந்து அரசுக்கு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் கேரள மாநிலத்திற்கு 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் கனிம வளங்கள் கேரளாவிற்கு ஏற்றி செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஏராளமான வாகனங்கள் புலியரை நுழைப்பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மேலும் தமிழக கேரள எல்லை பகுதியான புலியறை பகுதிகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு என்றும் பிற வாகனங்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

கேரளா மாநிலத்திற்கு 10 சக்கரங்களுக்கு மேல் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு திடீர் தடை பொதுமக்கள் மகிழ்ச்சி.
 

Tags :

Share via