வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலிஎண்ணிக்கை மூன்றாக உயர்வு.

by Editor / 29-08-2024 09:58:41am
வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலிஎண்ணிக்கை மூன்றாக உயர்வு.

மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 24ஆம் தேதி ஏற்பட்ட  வெடி விபத்தில் அங்கு வேலை பார்த்த கர்ணன், லெட்சுமணன், குமார், கலியபெருமாள் ஆகிய நான்கு பேரில் கர்ணன்‌ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்து    திருவாரூர்  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் கடந்த 25ஆம் தேதி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.  குமார் தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார். கலியமூர்த்தி என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags : வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலிஎண்ணிக்கை மூன்றாக உயர்வு.

Share via

More stories

Logo