தண்ணீர் கேன் தூக்கிச்சென்ற மாணவன் திடீர் உயிரிழப்பு
வியாசர்பாடிகல்யாணபுரத்தில் வசித்து வரும் பார்த்திபன் (46). ஐ.டியில் வேலை செய்து வரும் இவருக்கு 16 வயதில் விஜய் திலீபன் என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இருவரும் இரு சக்கர வாகனத்தில் 2 தண்ணீர் கேன்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தனர். ஒரு தண்ணீர் கேனை தூக்கிக்கொண்டு விஜய் திலீபன் முதல் மாடிக்குச் சென்றார். அதன் பிறகு இரு சக்கர வாகனத்தை ஓரமாக விட்டுவிட்டு அவரது தந்தை கார்த்திபன், மற்றொரு தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு மேலே சென்று பார்த்தபோது, தண்ணீர் கேன் ஓரமாக சாய்ந்து கிடந்தது. மேலும் அவரது மகன் விஜய் திலீபன் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்த போது பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை பார்த்திபன் கதறி அழுதார். மாரடைப்பால் சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.
Tags :