நிலாவில் ஆய்வு மேற்கொள்ளும் வடிவமைக்கப்பட்டுள்ள கையடக்க ரெபோ

by Staff / 29-04-2022 03:57:56pm
நிலாவில் ஆய்வு மேற்கொள்ளும் வடிவமைக்கப்பட்டுள்ள கையடக்க ரெபோ

 நிலாவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஜப்பானில்  வடிவமைக்கப்பட்டுள்ளது பந்து வடிவிலான ரெபோ  பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் டாமி என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால் இந்தக் கையடக்க ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது 4 அங்குல விட்டமும் 250 கிராம் எடையும் கொண்ட இந்த ரோபோ சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உருவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது .சோரோ கியூன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ நிலவில் மைன்ஸ் 170 டிகிரி குளிர் வரை தாங்கும் வகையில் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் மணல் தரையில் பயணிக்க ஏதுவாக இரண்டு சக்கரங்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு நிலவிற்கு அனுப்பப்படும் செயற்கைக்கோளுடன் சேர்த்து அனுப்ப படும்  இந்த  ரோபோ செயற்கைக்கோள் தரையிறங்கும் காட்சிகள் மற்றும் நிலவின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்ப உள்ளது.

 

Tags :

Share via