இன்று த.வெ. க தலைவர் விஜய் பிரச்சாரம் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

by Admin / 06-04-2026 09:31:46am
இன்று த.வெ. க தலைவர் விஜய்   பிரச்சாரம் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வில்லிவாக்கம் ,அண்ணா நகர், விருகம்பாக்கம் , தி.நகர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வில்லிவாக்கம் சிட்கோ நகர் சந்திப்பு காலை 11:00 மணி முதல் தியாகராய நகர் மாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆகிய இரண்டு இடங்களுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களை காட்டி அண்ணா நகர் உள்பட மற்ற மூன்று தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல் துறை விதித்த  கட்டுப்பாடுகள் காரணமாக திட்டமிட்டபடி பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாது எனத் த.வெ. க தரப்பில் இன்றைய பிரச்சாரம் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்டே தங்கள் கட்சித் தலைவர் பிரச்சாரத்திற்கு முட்டுக்கொட்டை போடுவதாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் .மார்ச் 30 அன்று பெரம்பூரில் ,கொளத்தூரில்,விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிமுறைகள் மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo