3 நாளில் உயிரை கொல்லும் ஆபத்தான புதிய வைரஸ்

சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வைரசை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோய்க்கிருமி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளெலிகளை இந்த வைரஸ் மூன்று நாட்களுக்குள் கொன்றதாகக் கூறப்படுகிறது. சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் கொரோனா உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது இந்த புதிய வைரஸ் சீனாவில் இருந்து உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tags :