“சிறுவன் உயிரிழப்புக்கு திமுக அரசே காரணம்” - நயினார் நாகேந்திரன்
சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து, 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில், “பல நாள் புகாரளித்தும் ஒரு சிறு மின்கசிவைக் கூட சீர்படுத்த முடியாத நிர்வாகத்தை வைத்துள்ள திமுக அரசு, ‘நாடு போற்றும் நல்லாட்சி’ என விளம்பரம் செய்து வருகிறது. மாணவனின் மரணத்திற்கு ஆளும் அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அம்மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
Tags :



















