சொந்த மகளை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்

கேரளா: ஓமனப்புழா பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் (28). இவர் கணவரை பிரிந்து கடந்த சில மாதங்களாக பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை ஜோஸ்மன் (53). இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜாஸ்மின் நேற்று (ஜூலை 2) வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தற்கொலையாக இருக்கலாம் என முதலில் போலீசார் கருதினர். ஆனால், கழுத்தில் காயங்கள் இருந்ததால் அவரது தந்தையிடம் விசாரித்ததில் ஜாஸ்மினை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags :