48 லட்சம் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறினர் - ஐநா கவலை

by Staff / 12-04-2022 03:33:31pm
 48 லட்சம் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறினர் - ஐநா கவலை

 
ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய 6 வாரத்தில், கிட்டதட்ட 48 லட்சம் குழந்தைகள் உக்ரைனை விட்டு வெளியேறியிருப்பதாக ஐநா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் போர் சூழலை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக தங்களது குழந்தைகளை அண்டை நாடுகளில் உள்ள உறவினர்களிடம், அகதிகளாக அனுப்பி வருகின்றனர்.
 
உக்ரைனில் உள்ள 75 லட்சம் குழந்தைகளில், கிட்டதட்ட 3ல் 2 பங்கு குழந்தைகள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அவசர திட்டத்தின் இயக்குனர் மேனுவேல் பான்டைன் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்றதொரு இடப்பெயர்ச்சியை கடந்த 31 ஆண்டுகளில் தான் சந்தித்ததில்லை எனவும், 142க்கு மேற்பட்ட சிறார்கள் போரில் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறினார். 

 

 

Tags :

Share via