அண்ணாமலையார் ஆலயத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்.

by Editor / 30-03-2025 08:57:30pm
அண்ணாமலையார் ஆலயத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்.

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோயிலில் வார  விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கு  மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர்.

விடுமுறை தினம் என்பதால் திருக்கோவில் கூட்டம் அதிகரித்து இருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 5 நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வழக்கமாக அண்ணாமலையார் திருக்கோவிலில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மட்டுமில்லாமல் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து வரும் நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட மாநில பக்தர்களும் அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவு வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்தது.
தொடர்ந்து தரிசன மேற்கொள்ளும் பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரிவலப்பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர்.

 

Tags : அண்ணாமலையார் ஆலயத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்.

Share via