திருவாரூர்;50 ரவுடி வீடுகளில் சோதனை.5 பேர் அதிரடி கைது.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் நபர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் கொலை கொள்ளை போன்ற வழக்குகளில் தொடர்புடைய 500க்கும் மேற்பட்ட நபர்களின் சரித்திர பதிவேடு செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இவர்களை கண்காணிக்கும் விதமாகவும் அவர்கள் தொடர் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகள் மற்றும் இருப்பிடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில் நீடாமங்கலம் அருகே சமத்துவபுரத்தை சேர்ந்த அருண் பிரபு என்கின்ற கட்ட பிரபு வயது 39 இவருக்கு நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ரவுடி பராமரிக்கப்பட்டு வருகிறது.இவர் மீது கொலை கொள்ளை வழிப்பறி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலுவையில் இருந்து வருகிறது இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கும்பகோணம் பகுதியில் சிலை திருட்டு வழக்கில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் ஏழு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி வெளியில் வந்துள்ளார் இந்த நிலையில் இவர் வலங்கைமான் தொழுவூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக முறையில் நின்றவரை போலீசார் விசாரணை செய்தபோது இவர் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதற்காக கையில் அரிவாளோடு நின்றது தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கட்ட பிரபு என்பவரின் வீட்டை நீடாமங்கலம் போலீசார் சோதனை செய்த பொழுது தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆடு குட்டி என்கின்ற ஆறுமுகம் மற்றும் இரண்டு நபர்கள் அறிவாலோடு தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை செய்த பொழுது முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினர் ரவுடி ஆடு குட்டி என்கின்ற ஆறுமுகம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொழுது அவருக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை அடிதடி திருட்டு வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது மேலும் அவருடன் தங்கி இருந்த நபர்கள் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் பிரகாஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மேலும் எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரின் வீட்டில் சோதனை செய்தபோது எந்தவித அனுமதியும் இல்லாமல் எரவாஞ்சேரி கடைத்தெரு அருகே அரிவாள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்தனர்
Tags : திருவாரூர்;50 ரவுடி வீடுகளில் சோதனை.5 பேர் அதிரடி கைது.