அரசு சார்பில்  வ.உ.சி 150வது பிறந்த நாள் விழா : முதல்வரின் அறிவிப்புக்குகுடும்பத்தினர் வரவேற்பு.

by Editor / 19-08-2021 06:58:33pm
அரசு சார்பில்  வ.உ.சி 150வது பிறந்த நாள் விழா : முதல்வரின் அறிவிப்புக்குகுடும்பத்தினர் வரவேற்பு.


சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150வதுபிறந்த நாள் விழா தமிக அரசு சார்பில் ஆண்டுதோ அரசு விழாவாக கொண்டாடி வருகின்றனர் இந்த ஆண்டு அவருடைய 150வது பிறந்த நாள் தினம் என் பதால் அவரை சிறப்பு செய்யும் விதமாக எந்நாளை வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்க்கூடியது என்றும், அதனை வரவேற்கும் விதமாக தங்களது நன்றியை முதல்வருக்கு தெரிவித்து கொள்வதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வ.உ.சியின் கொள்ளு பேத்தி செல்வி கூறியுள்ளார்.


சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் 150வதுபிறந்த நாள் விழா அரசு சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் என்று கடந்த 15ந்தேதி சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 


இவரது அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ.உ.சியின் கொள்ளுபேத்தி செல்வி  செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல தியாகிகளின் தியாகங்களை தமிழக அரசு நினைவுகூர்ந்துள்ளது.அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்த்தில் பங்கேற்று தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டியகட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி உட்பட பல தியாகிகளின் தியாகங்கள் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும் வ.உ.சியின் 150 வது பிறந்த நாளை அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்க கூடியது என்றும், இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு தங்களது நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்தார், மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார்.
 

 

Tags :

Share via