அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

by Staff / 24-04-2024 03:37:16pm
அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை மீது, இன்று அதிகாலை பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு சிலையின் மீது படாமல் பக்கத்தில் இருந்த சுவற்றில் பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த இளைஞர்களை விரட்டினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து போலீஸில் புகார் அளித்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories