இன்று டெல்லி முதல்வர் அதிசி தனது பதவியை ராஜினாமா

டெல்லியை இரண்டு முறை ஆண்ட ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையும் ஆட்சி பொறுப்பேற்கும் என்கிற கருத்துக்கணிப்பை பொய்யாக்கும் விதமாக தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக வந்து 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியை தம் வசப்படுத்தி உள்ளது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த கெஜ்ரிவால் அமைச்சரவையில் அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டியின் காரணமாக அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதோடு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டதன் காரணமாக கட்சி பலம் இழந்து போனது. இன்று டெல்லி முதல்வர் அதிசி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இவர் 22 பேர்களில் ஒருவராக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :