விடுமுறை முடிந்து  சென்னைக்கு செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்.

by Staff / 05-10-2025 09:59:30pm
விடுமுறை முடிந்து  சென்னைக்கு செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.ஆயுத பூஜை, விஜயதசமி, மற்றும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என தொடர் ஒரு வார விடுமுறை முடித்துவிட்டு நாளை பள்ளி மற்றும் கல்லூரி வேலை நாட்கள் என்பதால் இன்று இரவே சென்னை நோக்கி  செல்ல வேண்டும் என பொதுமக்களின் வாகனங்கள் படையெடுத்து செல்வதால் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,திண்டிவனம் செல்லும் சாலைப் பகுதியில் கூடுதல் கவுண்டர்கள் உள்ள போதும்  இந்த போக்குவரத்து நெரிசலானது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றது.

 

Tags : விடுமுறை முடிந்து  சென்னைக்கு செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்.

Share via

More stories

Logo