அண்ணாமலையார் திருக்கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு.

by Staff / 05-10-2025 05:39:18pm
அண்ணாமலையார் திருக்கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி நான்காம் பிரகாரத்தில் க்யூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் காத்திருப்பு கூடம் கட்டப்படுவதாக புகைப்பட ஆதாரங்களுடன் சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் ராதாகிருஷ்ணன் மற்றும் T.R.ரமேஷ் ஆகிய இருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்புறமும் வெளிப்புறமும் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், சௌந்தர் ஆகிய இருவரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரம் முன்பு உள்ள இடம் மற்றும் வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடத்தின் கல்வெட்டுகள் எந்த ஆண்டுகள் கட்டப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வில் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் பொன்னையா, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர், கோவில் இணை ஆணையர் பரணிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் கிராம பிரதீபன் மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுப்பணித்துறையினர் நெடுஞ்சாலை துறை என பல்வேறு துறை ரீதியான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

Tags : அண்ணாமலையார் திருக்கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு.

Share via