கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் 25 -ஆம் ஆண்டு வெள்ளி விழா .முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்.
இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்த தமிழக முதலமைச்சரை அரசு அதிகாரிகளும் கட்சியை நிர்வாகிகளும் வரவேற்றனர். பின்னர் அவர் வேன் மூலம் கன்னியாகுமரி நோக்கி சென்றார். இன்று மதியம்அவர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் 25 -ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சுமார் 1.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட நினைவு வளைவையும் திறந்து வைக்கிறார். எத்தனை தொடர்ந்து மாலை ஐந்து முப்பது மணி அளவில் நாகர்கோவில் அடுத்த கல்லடி வி ளையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் முழு உருவச் சிலையை திறந்து வைக்கிறார். மாலை ஆறு முப்பது மணி அளவில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள குமரி கொமேதகம் பொன்னப்ப நாடார் சிலையையும் திறந்து வைக்கிறார். நாளை நாகர்கோவில் பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் 25,000 மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
Tags :


















