பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

by Editor / 16-07-2022 11:16:00am
 பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 95.45 அடியாக உள்ளது. தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஓரிரு நாட்களில் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணையில் இருந்து எந்த நேரமும் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்படலாம்,  எனவே பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான  இடங்களுக்கு செல்லுமாறும், மக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாத்து கொள்ளுமாறும் நீர் வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories