25000 வாட்ஸ் மின்சாரம் பாயும் ரயில் மின்தடத்தில்மழைக் கால எச்சரிக்கை.
மழைக்காலங்களில் மரங்கள் விழுவது இயல்பான ஒன்று. அவை 25000 வாட்ஸ் மின்சாரம் பாயும் ரயில் மின்தடத்தில் விழும்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இது மாதிரியான சூழ்நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை அனுப்பி பாதிக்கப்பட்ட மின்தடத்தை சரி செய்ய முடியும். ரயில் மின்தடத்தில் மரம் விழுந்தால் துண்டிக்கப்பட்ட மின் பாதையில் இருந்து 2 மீட்டர் தூரத்திற்கு மின்சார தாக்கம் இருக்கும். எனவே பொதுமக்கள், அபாயத்தை விளைவிக்கும் பாதிக்கப்பட்ட மின் பாதை அருகில் செல்லாமல், அருகிலுள்ள ரயில்வே கேட் அல்லது ரயில் நிலையத்தில் உள்ள ஊழியரிடம் தெரிவிக்கவும்.
பராமரிப்பு மற்றும் அவசர பணிகளுக்காக மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, நாசரேத், ராஜபாளையம், புனலூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களில் 15 பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, காரைக்குடி, ராஜபாளையம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு பராமரிப்பு ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
Tags : 25000 வாட்ஸ் மின்சாரம் பாயும் ரயில் மின்தடத்தில்மழைக் கால எச்சரிக்கை.