இன்றுஉடுப்பியில் லட்சகணக்கானோா் கூடிய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரை.
பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உடுப்பியில் பன்னஞ்சே சர்க்கிளில் இருந்து கல்சங்கா சர்கில் வரை ஒரு மிகப்பெரிய சாலை பேரணியை நடத்தினார். சாலையில் இருமருங்கிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ,அவர் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ கிருஷ்ணர் மடத்திற்கு சென்று அங்கு கிருஷ்ணரை தரிசனம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் நடைபெற்ற லட்சகணக்கானோா் கூடிய கீதா பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், மாணவர்கள், துறவிகள் மற்றும் பிரபலமானவர்கள் ஒருங்கிணைந்து கீதையின் சுலோகங்களை ஒரே நேரத்தில் உரைத்தனர். இதனுடன் கனக மகா மண்டபத்தை திறந்து வைத்து கனகண்டிக்கு தங்க கவசத்தை அர்ப்பணித்ததோடு உடுப்பின் முக்கியத்துவத்தையும் ராமஜென்ம பூமி இயக்கத்தில் உடுப்பி மற்றும் மாத்துவச்சாரியின் பங்கையும் தனது உரையில் எடுத்துரைத்தார். உடுப்பிக்கு பிரதமரின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags :


















