பேரழிவை ஏற்படுத்திய மழை வெள்ளம்.. 38 பேர் பலி
கென்யாவில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 38 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலத்த சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கென்யாவில் மார்ச் நடுப்பகுதியில் இருந்து கனமழை பதிவாகியுள்ளது, ஆனால் கடந்த வாரத்தில் பெய்த மழை தீவிரமடைந்துள்ளது.
Tags :