அண்ணனுக்கு சிறுநீரகத்தை தனமாக வழங்கிய தங்கை
டெல்லியைச் சேர்ந்த ஹரேந்திரா என்பவர் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்தார். அண்ணன் படும் வேதனை பார்த்த அவரது தங்கை பிரியங்கா (23) தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார். முதலில் அவரது குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை. இருப்பினும் பிரியங்கா விடாபிடியாக தனது சிறுநீரகத்தை தானமாக வழங்க உறுதியாக இருந்ததார். சமீபத்தில் இந்த அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக முடிந்தது. தற்போது ஹரேந்திராவும் அவரது தங்கை பிரியங்காவும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாசக்கார தங்கையின் செயல் நெகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
Tags :