பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு- ஆயுத காவல் படை பெண் காவலரின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது

by Admin / 04-02-2026 12:06:42pm
பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு- ஆயுத காவல் படை பெண் காவலரின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை டி. நகர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தனியார் நகைக்கடையில் வேலை செய்யும் பூபாலன் என்பவர் மாணவிபள்ளிக்கு செல்லும் போதெல்லாம் அவரிடம் மொபைல் எண் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் திங்கள் கிழமை மாலை மாணவி பள்ளியில் இருந்து திரும்பிய போது தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து  பிளைன் கிஸ் கொடுத்தும் தகாத சைகைகள் செய்து தொந்தரவு செய்துள்ளார். இதனை மாணவி தன்னுடைய பெற்றோர்களிடம் சொல்ல ...,அவர்கள் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் பேரில் தேனாம்பேட்டை போலீசார் பூபாலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ,மாணவியிடம் பாலியல் ரீதியான முயற்சி மேற்கொண்ட  நபர் ஆயுத காவல் படை பெண் காவலரின் கணவர் என்பதும்  இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 

 

Tags :

Share via