திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்தவேண்டும் -திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு..

by Editor / 27-03-2023 08:35:22am
திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்தவேண்டும் -திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு..

  தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவை த்தலைவர் சுந்தர மகாலிங்கம்  தலைமையில் குற்றால் ம் ட்ரிசில் ஹோட்டலில்  வைத்து நடைபெற்றது.தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையா வகித்தார்.

    கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு திருவாரூரில் நடைபெற இருக்கிற மாநாடு குறித்தும் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க வேண்டும் குறிப்பாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சம்பந்தமாகவும்  பாராளுமன்ற தேர்தல் வர இருக்கின்ற காரணத்தினால் விரைவில் பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமாகவும் வருகிற ஏப்ரல் மாதம் 4ஆம் தேதியோடு கூட்டுறவு வங்கி பதவிக்காலம் முடிவடைகிறது. கூட்டுறவு வங்கி தேர்தல் சம்பந்தமாகவும்,  மற்றும் கழக வளர்ச்சி சம்பந்தமாகவும்  ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் தென்காசி தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் ,கழக அமைப்பு துணைச் செயலாளர் முன்னாள் எம்.பி.ஆஸ்டின், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மாநில தொண்டர் அணி துணை செயலாளர்  ஆவின் ஆறுமுகம்,  கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்.கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, முன்னாள் வடக்குமாவட்ட செயலாளர் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, மாவட்ட பொருளாளர் செரீப், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via