முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவனேவின் வெளியிடப்படாத நினைவு குறிப்பு வீதியில் நான்கு நட்சத்திரங்கள்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவனேவின் வெளியிடப்படாத நினைவு குறிப்பு வீதியில் நான்கு நட்சத்திரங்கள் என்ற தலைப்பிலுள்ள புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று அதன் பதிப்பகமான பென் குயின் ரேண்டம் ஹவுஸ் தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் இறுதி அனுமதிக்காக காத்திருக்கிறது .2020 ஆம் ஆண்டு சீன எல்லை நெருக்கடி குறித்து இந்த புத்தகத்தில் உள்ள பகுதிகளை நாடாளுமன்றத்தில் மேற்கோள் கட்ட முயன்ற போது ராகுல் காந்தி தடுக்கப்பட்டார். அரசாங்கம் விவாதத்தை தவிர்ப்பதற்காகவே புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்று பொய் கூறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2023ல் வெளியிடப்பட்ட பதிப்பில் புத்தகங்கள் கிடைக்கிறது என்று கூறியதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரப்பூர்வ அனுமதி பெறாத நிலையில், இந்த புத்தகத்தின் பி டி எப் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடங்களில் கசிந்தது தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சர்ச்சை குறித்து மெமனம் கலைக்க ஜெனரல் ரவனே தனது பதிப்பகத்தின் விளக்கத்தை ஆமோதித்து புத்தகம் இன்னும் முறையாக விற்பனைக்கு வரவில்லை என்பது உறுதிப்படுத்தினார்.
Tags :



















