ரஷியா போரால் நெருக்கடிக்குள்ளாகிய டெக் நிறுவனங்கள்
உக்ரைன் மீது ரஷியா சண்டையிட்டு வருகிறது. உக்ரைன் நேட்டோ உறுப்பினர் இல்லாததால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வரும் உலக நாடுகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளன.
அமெரிக்காவின் சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் பேன்ற லாபம் சம்பாதிக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதா ரஷியாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக என நெருக்கடிகுள்ளாகியுள்ளன.
பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற நிறுவனங்கள் உலகம் முழுவதும் கால்பதித்துள்ள நிறுவனங்களாகும். இவை உலகளாவிய அளவில் எங்கும் பரந்து விரிந்து தனித்துவம் வாய்ந்த நிறுவங்களாக உள்ளன.
ஆனால், லாபம் அடிப்படையில் இந்த நிறுவன்ங்கள் கண்டிப்பான கொள்கை முடிவை எடுப்பதன் மூலம் சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ரஷியாவுக்கு எதிராக ஏராளமான நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில் ஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் ரஷியாவுக்கான தங்களது சேவைகளை நிறுத்த ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே, கிரெம்ளின் மாளிகை கோரிக்கைக்கு வளைந்து கொடுக்க மறுத்ததால், பேஸ்புக் ரஷியாவில் தடைவிதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டுவிட்டர் கடந்த ஆண்டு ரஷிய அரசின் உத்தரவுகள் சிலவற்றை நீக்கியதன் மூலம், அபராதம் விதிப்புக்கு உள்ளானது. தற்போது, சிலருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஐரோப்பிய கொள்கை பகுப்பாய்வு மையத்தின் தலைவர் மற்றும் சிஇஓ, அலினா போலியாகோவா உக்ரைனில் ரஷியாவின் ஆக்கிரமிங்கள் குறித்து வெளியிட மேற்கு நிறுவனங்கள் தங்களது ஆன்லைனில் இடங்கள் அளித்துள்ளன. கிரெம்பிள் உண்மைகளை மறைக்க ஆக்ரோசமாக நகர்ந்து வருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனங்கள் தங்களுடைய தளங்களிலும் அதிக வருமானம் திரட்டும் ரஷியா மீடியாக்களை கட்டுப்படுத்தியுள்ளது. யூடியூப்பில் ரஷியாவின் ஏராளமான சேனல்கள் மானிடைஸ் பெற்றிருந்தது.
தற்போது அவற்றை யூடியூப் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. அரசாங்கத்தின் வேண்டுகோள்படி, ஆ.டி. மற்றும் பல சேனல்களை உக்ரைனில் பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. தவறான தகவல்களை பரப்பியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அரசு ஆப்பிள் சிஇஓ-விற்கு ஆப்பிள், தயாரிப்பு ஆப்பிள் நிறுவனத்தை அணுகுவது உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனால் அதிகாரமிக்க அரசுகளை எப்படி கையாள்வது என மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் திணறி வருகின்றன.
சண்டை நடந்து வரும் நிலையில், தவறான தகவல்கள் அனைத்தும் கட்டுப்படுத்த சமூக வலைத்தளங்கள் தவறிவிட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.
Tags :