அமெரிக்கா செல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர்
கொரோனா இரண்டாம் அலையின் போது நாட்டில் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளார்.
5 நாட்களுக்கு முன்பு அமெரிக்கா 20 மில்லியன் ஃபைசர், மொடெர்னா மற்றும் ஜே அண்ட் ஜே தடுப்பூசிகளை ஜூன் மாத இறுதிக்குள் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். கூடுதலாக 60 மில்லியன் அஸ்ட்ரஜெனகா தடுப்பூசிகளும் அனுப்பப்படும்.
விநியோகம் தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை இருப்பினும் இந்த தடுப்பூசிகளை பெறும் பயனர்களில் இந்தியாவும் ஒன்று. அஸ்ட்ரஜெனகாவின் தடுப்பூசிகள் கோவிஷீல்டாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் பல கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலை இன்னும் பெறவில்லை.
24 முதல் 28 தேதிகளில் அமெரிக்கா செல்லும் ஜெய்ஷங்கரின் முக்கிய நோக்கம், இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் முடிந்தவரை பல தடுப்பூசிகளை அனுப்ப அமெரிக்காவை வற்புறுத்துவதாகும். சமீபத்தில், வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏகே அப்துல் மோமன் இது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜெய்சங்கரை அணுகினார். நேபாளம், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளும் தடுப்பூசிகளைக் கேட்டு வருகின்றன.
வெளியுறவுத்துறை அமைச்சம் வெளியிட்ட அறிக்கையில், நியூயார்க்கில் ஜெய்ஷங்கர் ஐக்கிய நாடுகள் செயலாளர் ஆண்டனியோ குட்டோரஸை சந்திப்பார். வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளார் அந்தோனி ப்ளிங்கனை சந்திப்பார். அமெரிக்க நிர்வாகத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் கேபினட் உறுப்பினர்களையும் இருநாட்டு உறவுகள் தொடர்பாக சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் கொரோனா தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையான கூட்டுறவு தொடர்பாக இரண்டு வர்த்தக அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜி7 வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில், இந்த மாத துவக்கத்தில் ஜெய்ஷங்கர் ப்ளிங்கனை சந்தித்தார். கொரோனாவை ஒழிப்பதற்கான உலகளாவிய டாஸ்க் ஃபோர்ஸ் குறித்து வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் பேசினார். ஜெய்ஷங்கரின் வருகைக்கான அடித்தளத்தை அமெரிக்காவின் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து அமைத்துக் கொடுத்துள்ளார். அவர் சி.டி.சி இயக்குனர் ரோசெல் வலென்ஸ்கி, அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபாசி, யு.எஸ்.ஏ.ஐ.டி நிர்வாகி சமந்தா உள்ளிட்ட அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களாக, ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட், ஜே & ஜே தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் கோர்ஸ்கி உள்ளிட்ட தடுப்பூசி உற்பத்தியாளர்களையும், தடுப்பூசிகள் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளுக்கான மூலப்பொருட்களை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்களையும் சந்து சந்தித்தார்.
வியாழக்கிழமை, வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, கோவிட் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கும், நாட்டில் அவை உற்பத்தி செய்வதற்கும் அமெரிக்க நிறுவனங்களுடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று கூறியிருந்தார். நிச்சயமாக, சில தடுப்பூசிகளை வேறு சில நாடுகளுக்குக் கிடைக்கச் செய்யும் நோக்கம் கொண்ட அமெரிக்க அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் என்று பாக்சி கூறினார். வெளிநாட்டிலிருந்து வாங்கக்கூடிய அனைத்து தடுப்பூசிகளும் எங்கள் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். வெளிநாடுகளுக்கு அனுப்பும் எந்தவொரு தடுப்பூசிகளும் தயாரிப்பு தரத்திற்கான எஃப்.டி.ஏ (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) அனுமதி பெற்றிருக்கும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க தூதரகத்தின் சார்ஜ் டி அஃபைர்ஸ்ஸின் டேனியல் பி ஸ்மித், இந்தியாவில் ஜே & ஜே நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசிகளின் கூட்டு உற்பத்தியையும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா போன்ற உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க உதவும் வழிகளையும் அமெரிக்கா கவனித்து வருவதாகக் கூறியிருந்தார். இதுவரை, இந்தியாவுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் கோவிட் உதவி சுமார் சுமார் 100 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் உயிர் காக்கும் பொருட்கள் கொண்ட சரக்கு விமானங்களும் அடங்கும்.
Tags :