“அண்ணா என்று அழைப்பது அன்பின் வெளிப்பாடு” - தமிழிசை கருத்து

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து, வேல்முருகன் பேசியதற்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மாணவ மாணவிகள், விஜய்யை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு. அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்தக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவதாகும். இது தமிழ் பண்பாடும் அல்ல, மனித நேயமும் அல்ல” என்றார்.
Tags :